தந்தி

Sponsor

Featured Posts

சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்த வேண்டும்!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐ.நா பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும் அல்லது குறித்த ஒரு பணிக்காக நியமிக்கப்படும் தீர்ப்பு மன்றம் ஒன்று இலங்கையில் நடந்த சர்வதேச மனித உரிமைகள் மீறல் பற்றி ஆராய நியமிக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான ஒரு கோரிக்கை எம்மிடையே எழுந்துள்ளதோடு ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் செயலாளர் நாயகத்தின் கருத்தும் அவ்வாறான தன்மையில் அமைந்துள்ளதன் அடிப்படையில் அவ்வாறான ஒரு நடவடிக்கை எடுக்க முடியும் என்று தான் கருதுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனது வாராந்த கேள்வி பதில் அறிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவரது கேள்வி பதில் அறிக்கை வருமாறு, இவ்வாரக் கேள்வி கொழும்பில் இருந்து வந்துள்ளது. கேள்வி பின்வருமாறு.

பத்திரிகையாளர் கேள்வி :- அடுத்த வாரம் ஜெனிவாவில் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கட்டத் தொடர் ஆரம்பமாகின்றது. அது பற்றிய உங்கள் கருத்தென்ன?

பதில் :- 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 30/01 என்ற பிரேரணை ஐ.நா மனித உரிமைகள் பேரவையினால் நிறைவேற்றப்பட்டது. அதன் கீழ் இலங்கை அரசாங்கத்திற்கு பல கடப்பாடுகள் இருந்தன. அவற்றை நிறைவேற்ற இரண்டு ஆண்டு காலம் கொடுக்கப்பட்டது. ஆனால் அவற்றை நிறைவேற்றாமலேயே இலங்கை அரசாங்கம் இருந்து வந்தது.

கடந்த மார்ச் மாதத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பிலான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இதற்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியது. பொறுப்புக்கூறலை உள்ளடக்கிய நிலைமாறுகால நீதிப் பொறிமுறையை உருவாக்குவதற்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் அதன்போது வழங்கப்பட்டது. இலங்கையின் அனுசரணையைப் பெறுவதற்காக மேற்கு நாடுகள் அந்தப் பிரேரணையின் காரத்தை பெருமளவுக்குக் குறைத்தன என்பது உங்களுக்குத் தெரியும். சர்வதேச சமூகம் தற்போதைய இலங்கை ஆட்சியாளருக்குச் சாதகமான முறையிலேயே அப்போது இந்தத் தீர்மானத்தைக் கொண்டுவந்தன. அப்படியும் அரசாங்கம் அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டவில்லை.

இப்போது ஒரு வருடம் கடந்துவிட்டது. அடுத்தவாரம் ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் ஆரம்பமாகின்றது. ஆனால் இந்த ஒரு வருடத்தில் கொடுத்த வாக்குறுதிகளில் எவை நிறைவேற்றப்பட்டன?

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சம்பந்தமான அலுவலகம் ஒன்றை அமைப்பதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டு இப்போது ஒன்றரை வருடங்கள் சென்றுவிட்டது. இன்னும் அது செயற்படத் தொடங்கவில்லை. பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் கைவாங்கப்படவில்லை. அந்தக் கொடூரமான சட்டத்தின் கீழ் கைதான பலர் இன்னமும் தடுப்பில் உள்ளனர். பலர் சம்பந்தமாக வழக்குகள் பதியப்படவில்லை. சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. இனநெருக்கடிக்கான அரசியலமைப்பு மூலமான தீர்வு முயற்சிகள் முன்னெடுக்கப்படும் நிலையும் தற்போது இல்லை என்றே கூறலாம். நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தல் முடிவுகளையடுத்து கூட்டரசாங்கம் அதனை முன்னெடுப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்பதே யதார்த்தம்.

இந்த நிலையில் சர்வதேசம் என்ன செய்யப்போகின்றது? சர்வதேசத்தின் அழுத்தங்களால் மட்டுந்தான் இங்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்த முடியும். ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஆரம்பமாகவுள்ள நிலையில், தமிழர்களுக்கு நீதியைக் பெற்றுக் கொடுக்க சர்வதேச சமூகம் இனியும் தாமதிக்கக்கூடாது. அமெரிக்காவில் இருந்து வந்த நிஷா பிஸ்வால் அவர்களிடம் ஐ.நா மீண்டும் இருவருடங்கள் தவணை கொடுப்பதைப் பற்றி எனது ஆட்சேபணைகளை சென்ற வருட ஆரம்பத்தில் தெரிவித்த போது தமிழர்களை ஒரு போதும் அமெரிக்கா கைவிடாது என்றார். இப்பொழுது அவரும் பதவி இழந்துவிட்டார்.

எமது பெரும்பான்மையின அரசாங்கம் நெருக்குதல் இல்லாவிட்டால் ஒரு போதும் எமது உரிமைகளைத் தரமுன்வராது என்பதே எனது கருத்து. நியாயமான முறையில் போர்க் குற்றங்களை விசாரிக்க அரசாங்கம் முன்வராது. எந்தளவுக்கு நெருக்குதல்களை பிற அரசாங்கங்கள் உண்டு பண்ணுவன என்பது நாம் அவர்களுடன் சேர்ந்து பேசி ஏற்படுத்த வேண்டியதொன்று. காலங் கடந்தால் “ஆறின கஞ்சி பழங்கஞ்சி” ஆகிவிடும்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையை ஐ.நா பாதுகாப்புச்சபை ஆற்றுப்படுத்த வேண்டும் அல்லது குறித்த ஒரு பணிக்காக நியமிக்கப்படும் தீரப்பு மன்றம் ஒன்று இலங்கையில் நடந்த சர்வதேச மனித உரிமைகள் மீறல் பற்றி ஆராய நியமிக்கப்பட வேண்டும் என்று ஒரு கோரிக்கை எம்மிடையே எழுந்துள்ளது. ஐ.நா மனித உரிமைகள் மன்றத்தின் செயலாளர் நாயகத்தின் கருத்தின் அடிப்படையிலேயே அவ்வாறான ஒரு நடவடிக்கை எடுக்க முடியும் என்று கருதுகின்றேன்.

முன்னாள் ஜனாதிபதியை விட அதிக சொத்துக்களை வைத்திருக்கும் கருணா..

நமது நாட்டு (இலங்கை) அரசியல்வாதிகளில் அதிகம் பணக்காரர்களான முதல் பத்துப் பேரின் பெயர் வரிசையை அமெரிக்காவின் புகழ் பெற்ற வர்த்தக இதழான சஞ்சிகையை மேற்கோள் காட்டி இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருக்கின்றது.

இந்த வரிசையில் இருக்கும் தமிழர்கள் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணாவும் தான் தமிழ் அரசியல்வாதிகள். இவர்களது சொத்து மதிப்பு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை விட அதிகமாக இருப்பது ஆச்சரியமான அதிர்ச்சியளிக்கும் தகவல்.

அந்த சஞ்சிகையின் படி முன்னாள் ஜனாதிபதி மகிந்தவுக்கு தான் முதலிடம், அவரது சொத்து மதிப்பு 18 பில்லியன் அமெரிக்க டொலர் அதாவது 1800 கோடி டொலர். இலங்கை ரூபாவின் படி சுமார் 2 லட்சத்து 27 ஆயிரம் கோடி ரூபா.

முதல் 10 கோடீஸ்வர அரசியல்வாதிகள்.

முதலாமிடம் - மஹிந்த ராஜபக்க்ஷ (18 பில்லியன் டொலர்)

இரண்டாமிடம் - அமைச்சர் அர்ஜின ரணதூங்க (6 கோடி 80 லட்சம் டொலர்)

மூன்றாமிடம் - ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (1கோடி 40 லட்சம் டொலர்)

நான்காமிடம் - ஆறுமுகம் தொண்டமான் (19 லட்சம் டொலர்)

ஐந்தாமிடம் - கருணா (17 லட்சம் டொலர்)

ஆறாமிடம் - ஏ.எச்.எம். பௌசி (14 லட்சம் டொலர்)

ஏழாமிடம் - முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க (14 லட்சம் டொலர்)

எட்டாம் இடம் - ஜே.வி.பியின் எம்.பியான அனுரகுமார திஸாநாயக்க (13 லட்சம் டொலர்)

ஒன்பதாம் இடம் - ஏ.எல்.எம். அதாவுதுல்லா (9 லட்சம் டொலர்)

பத்தாம் இடம் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 8 லட்சத்து 60 ஆயிரம் டொலர்) இந்த பெறுமதியை இலங்கை ரூபாவில் அறிய விரும்புவோர் 154 ஆல் பெருக்கிப்பார்த்துக் கொள்ளுங்கள்.

சாவே இல்லாத மனிதர் 2050 ல் இருப்பார்கள்

2050ம் ஆண்டில் சாவு அற்ற மனிதர்கள் இந்த உலகத்தில் வாழ்வார்கள். இது அதிசயமாக இருக்கும் ஆனால் உண்மை. மனித வாழ்வு என்பது, இறுதியில் பார்த்தால் மூளையில் உள்ள நினைவுகள் தான். உடல் ஊனமாகிப் போகும். ஆனால் உண்மையில் மனித வாழ்வு என்பது, ஒருவரின் ஞாபகங்களே ஆகும். மூளை எப்போது இறக்கிறதோ. அன்றே மனிதனும் இறந்துவிடுகிறான் என்று பொருள். ஆனால் பலர் இதனை ஏற்க்க மாட்டார்கள்.

தற்போது விஞ்ஞானிகள் மனித மூளையில் உள்ள நினைவு செல்களை அப்படியே காப்பி செய்து. அதனை வைத்திருக்க கண்டு பிடித்துள்ளார்கள். ஆனால் அதில் பயன் எதுவும் இல்லை. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு சாதனம், மூளையை போல இயங்க வல்லது. எனவே எமது ஞாபங்களை காப்பி செய்து அந்த சாதனத்தினுள் செலுத்தினால் போதும். அந்த மூளை உயிர்பெற்று விடும். இதனூடாக ஒருவர் வாழ முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள். தற்போது இந்த இயந்திரத்தோடு உதடுகளை, கைகளை மற்றும் கால்களை பொருத்தவும்.

செயற்க்கை நியூரான்கள் கொண்டு அசைவுகளை ஏற்பாடுத்தவும் முனைகிறார்கள். இன்னும் 30 வருடங்களில் இது சாத்தியமாகிவிடும். இனி நாம் காரை வாங்கி வைத்திருப்பது போல இந்த சாதனத்தை வாங்கி, எமது நினைவுகளை மாற்றினால் போதும். எமது உடல் இறந்த பின்னனும் எமது மூளை உயிர்வாழும். இதனால் மனிதன் சாவைக் கடந்தும் வாழப் போகிறான்… இதுவே வருங்கால உண்மை ஆகும்…

தமிழில் பேசுவது அவமானம் இல்லை

சிங்கப்பூரில் உள்ள சீனக் கடை ஒன்றில், “தமிழில் பேசுவது அவமானம் இல்லை” என்ற வார்த்தைகள் எழுதப்பட்டுள்ளது. கடையில் அவர்கள் தமிழில் பேசுகிறார்கள் என்பது மிக மிக ஆச்சரியமான விடையம். தமிழுக்கு அவ்வளவு மரியாதை தற்போது உலகில் கிடைத்து வருகிறது. சமீபத்தில் தான் கூகுள் அட் சென்ஸ் , தமிழையும் தனது அதிகார பூர்வ மொழியாக ஏற்றுக்கொண்டது.

இதனூடாக இனி தமிழ் இணையங்கள் கூகுள் அட் சென்ஸ் விளம்பரங்களை போட்டு பணம் சம்பாதிக்கலாம். எனவே தமிழ் இணையங்கள் இனி பல்கிப் பெருகி உலகளாவிய ரீதியில் பெரும் இடத்தை பிடிக்கும் என்பதில் ஐயமில்லை.

சீமான் , ஈழத்தமிழர்களுக்கு தலைவனாக முடியாது - Lathan Suntharalingam

சீமான் , ஈழத்தமிழர்களுக்கு தலைவனாக முடியாது - Lathan Suntharalingam

காதல் நோயின் அறிகுறிகள் என்ன?

காதலில் வீழ்வது என்பது ஒருவித ரசாயன விவகாரம். அது நம் மனித ஜீவராசியின் இனவிருத்தியை உத்தரவாதப்படுத்தும் வகையில் உடலில் தொடர்ச்சியான பலவித ரசாயன மாற்றங்களை உண்டுபண்ணுகிறது என்கின்றனர் அறிவியலாளர்கள்.

வியாதியை ஒத்ததுதான் காதல் ( காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்நோய், ஞாபகம் வருகிறதா? ). எனவே, ஒரு நோய் ஏற்பட்டால் என்ன விதமான அறிகுறிகள் உடலில் தோன்றுமோ அதே போல, தெளிவாகத் தெரியும் உடல் ரீதியான அறிகுறிகள் காதல் நோயாலும் ஏற்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

இந்த அறிகுறிகள் என்ன ?

வியர்க்கும் கைகள், பசியின்மை ( "பாலுங்கசந்ததடி சகியே படுக்கை நொந்ததடி" ), முகம் உணர்ச்சிப்பெருக்கில் உப்புவது, இதயத்துடிப்பு அதிகமாதல் போன்றவை இவை .

காதலுக்கு பல கட்டங்கள் உண்டு. ஒவ்வொரு கட்டமும் ஒருவிதமான ரசாயனப் பொருட்களால் தூண்டப்படும் உடல் ரீதியான மாற்றங்களால் ஆட்டுவிக்கப்படுகின்றது.

முதலில் காமம் தோன்றும் ஒரு கட்டம் - இது அடிப்படையான பாலியல் ரீதியான ஒரு வேகம்.
இது ஈர்ப்பு நிலைக்கு இட்டுச் சென்று பின்னர் உணர்வு ரீதியாக ஒன்று சேரும் நிலைக்கும் பின்னர் அதுவே நீண்ட கால உறவுக்கும் வழி வகுக்கிறது.

ஆனால், இவை எல்லாம் ஒரு குறிப்பிட்ட வரிசைக் கிரமத்தில் வரவேண்டியதில்லை என்கிறார் ஆராய்ச்சியாளர் ஹெலன் ஃபிஷர். இவர் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார்.

"உங்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சகாவுடனோ அல்லது கல்லூரியிலோ அல்லது உங்கள் சமூக வட்டத்தில் இருப்பவர் ஒருவருடனோ உங்களுக்கு ஏற்படும் ஒரு வித ஆழமான பற்றை , நேசத்தை நீங்கள் உணரலாம். இது மாதங்கள் அல்லது சில ஆண்டுகளுக்குப் பின்னர், மேலும் கனிந்து மாற்றம் பெற்றும் திடீரென நீங்கள் அவர் மீது காதல் வயப்படுவீர்கள்" என்று ஃபிஷர் பிபிசியிடம் கூறினார்.எனவே பற்று முதலில் வருகிறது. அதன் பின்னர் மிகவும் ஆழமான காதல் , பின்னர் பாலியல் வேகத்துடன் தொடர்புள்ள உணர்வுகள் .... அல்லது நீங்கள் ஒருவரால் பாலியல் ரீதியாகக் கவரப்படலாம், அவர் மீது அதற்கு பின்னர் காதல் ஏற்படலாம், அதன் பின்னர் அவர் மீது ஆழமான பற்று அல்லது உணர்வுகள் ஏற்படலாம்.... அல்லது முதலில் ஒருவருடன் பாலியல் உறவு கொள்வதற்கு முன்னரேயே அவர் மீது நீங்கள் கண்மூடித்தனமாகக் காதல் கொள்ளலாம்" என்கிறார் அவர்.

இந்த ஒவ்வொரு கட்டத்திலும், ஒவ்வொருவிதமான ரசாயனப் பொருட்கள் உடலில் மாற்றங்களை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
காதல் படிகள் !

காமம்:
காமம் என்பது செக்ஸ் ஹார்மோன்களான டெஸ்டொஸ்டீரோன் (testosterone) மற்றும் ஈஸ்ட்ரோஜென் (oestrogen) போன்றவற்றால் உந்தப்படுகிறது. டெஸ்டொஸ்டீரோன் என்ற ஹார்மோன் ஆண்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. அது பெண்களின் பாலியல் உணர்வுகளிலும் பெரும் பங்கு வகிப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஈர்ப்பு:
இந்தக் கட்டம் காதலில் வீழ்ந்து மற்ற எல்ல விஷயங்களையும் காதலர்களால் சிந்திக்கக்கூட முடியாத நிலை. அவர்கள் உண்மையில் பசியை இழப்பார்கள். தூக்கம் தேவைப்படாது. தங்கள் காதலரைப் பற்றியே பகல் கனவு கண்டு கொண்டிருப்பார்கள்.

இந்த ஈர்ப்பு கட்டத்தில் "மோனோமைன்கள்" (monoamines) என்றறியப்படும் நரம்புகள் மூலம் செய்திகளைச் சொல்லும் ஹார்மோன்கள் முக்கிய பங்காற்றுகின்றன.டோபோமைன் (Dopamine) இது ஒரு வகை ரசாயனம். இது கோக்கெயின் மற்றும் நிக்கோட்டினோரெபின்ப்ரின் என்றவைகளால் தூண்டப்படுகிறது. இதற்கு அட்ரினலின் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இதுதான் காதலர்கள் உடலில் வியர்வையை உருவாக்குவது, இதயத்தை படபடக்கச் செய்வது போன்ற வேலைகளைச் செய்யும் பொருள்.

செரொட்டோனின் என்ற மற்றொரு ரசாயனம் காதல் விவகாரத்தை ஏற்படுத்தும் ரசாயனங்களில் மிகவும் முக்கியமானது. இதுதான் காதல் வயப்பட்டவர்களை தற்காலிகமாக பைத்திய நிலைக்குத் தள்ளும் வில்லன் !

பற்று, பாசம்:
இந்த கட்டம் ஈர்ப்புக் கட்டத்துக்கு அடுத்து ஏற்படுவது. அந்த உறவு நீடிக்கவேண்டுமென்றால் இந்த பற்று மிகவும் அவசியம். ஈர்ப்பு நிலை தொடர்ந்து நீடித்துக்கொண்டே இருந்தால், குழந்தைகளைத் தவிர வேறொன்றும் உற்பத்தி ஆகாது!இந்த "பற்று" கட்டத்தில், இரண்டு ஹார்மோன்கள் உடலில் சுரக்கின்றன. நரம்பு மண்டலத்தில் சுரக்கும் இந்த இரு ஹார்மோன்கள் சமூகப் பற்றை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுகின்றன.

இது தவிர வேறு இரண்டு ரசாயனன்கள் உடலில் விளையாடுகின்றன.

வேசோப்ரெஸ்ஸின் (Vasopressin):
நீண்ட கால உறவு என்ற கட்டத்தில் ஒரு முக்கிய ரசாயனம் இது. இந்த ரசாயனம் ஆண்களால் அடக்கப்படும்போது, காதலர்களுக்கிடையே நிலவும் பந்தம் உடனடியாகக் குறைகிறது.

விசுவாசம் இழப்பது, துணைவரை( அல்லது துணைவியை) புதிய காதலர்களிடமிருந்து பாதுகாக்கத் தவறுவது போன்றவை இதனால் ஏற்படுகின்றன.ஆக்ஸிடோசின் (Oxytocin) என்ற இந்த ரசாயனம் ஹைபொதலாமஸ் என்ற சுரப்பியால் வெளியிடப்படுகிறது. இது குழந்தைப் பேறு காலத்தின் போது சுரக்கிறது. இதுதான் தாய்ப்பால் உருவாக உதவுகிறது. இது தாய்க்கும் குழந்தைக்கும் இடையே ஒரு பந்தம், பிணைப்பு ஏற்பட உதவுகிறது.

இது காதலர்கள் அல்லது தம்பதியர் இருவர் உடலுறவு கொள்ளும்போது ஏற்படும் "பாலியல் உச்சகட்ட" நிலையிலும் வெளியாகிறது. இதுதான் வயது வந்தவர்களுக்கு இடையே பிணைப்பு ஏற்பட உதவுவதாகக் கருதப்படுகிறது.

அதிகம் உடலுறவு கொள்ளக் கொள்ள, தம்பதியருக்கிடையே பிணைப்பு ஆழமாகிறது என்கிறது இந்தக் கருத்தாக்கம் !

"ஆதலினார் காதல் செய்வீர் உலகத்தீரே", எனலாமா ?

மீண்டும் தலை தூக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்?

ஈராக்கின் பல பகுதிகளை தனது கட்டுப்பாட்டில் வைத்து அட்டூழியம் செய்து வந்த ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் ஒழிக்கப்பட்டு விட்டதாக கடந்த ஆண்டு இறுதியில் ஈராக் அறிவித்தது. இந்நிலையில், கிர்குக் பகுதியில் ஈராக்கிய அரசுப்படையினர் வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அல்-சாத்வுன்யா பகுதியில் திடீரென ராணுவ உடையில் வந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படை வீரர்களை நோக்கி சரமாரி தாக்குதல்களை நடத்தினர். சில மணிநேரங்கள் நீடித்த இந்த துப்பாக்கிச்சண்டையில் 27 ஈராக் வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலை தங்களது இயக்கத்தினர் நடத்தியதாக ஐ.எஸ் இயத்தின் ஊடகமான அமாக் செய்தி வெளியிட்டுள்ளது.